
பிரதமர் சுவிட்சர்லாந்து விஜயம்இன்று முதல் 23 வரை சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்றத்தின் 56வது வருடாந்த கூட்டம்
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் 56வது வருடாந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் இன்று (19) காலை நாட்டை விட்டு புறப்பட்டார்.
உலக பொருளாதார மன்றத்தின் 2026 வருடாந்த கூட்டம் இன்று (19) முதல் 23 வரை சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறுகிறது.
‘உரையாடலின் உணர்வு ‘ (A Spirit of Dialogue)என்ற தலைப்பில் நடைபெறும் 2026 உலக பொருளாதார மன்றத்தில், அரச தலைவர்கள், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விஜயத்தின் போது, பிரதமருக்கும் சர்வதேச தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்களுக்கும் இடையே உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல்கள் நடைபெறும்.

