
லடாக்கில் நிலநடுக்கம்
லே–லடாக் பகுதியில் இன்று (19) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 11.51 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுமார் 171 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் மையப்புள்ளி 36.71 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 74.32 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் அமைந்துள்ளதாகவும் முதற்கட்டமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை 8.44 மணியளவில் டெல்லியில் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES India

