
நுவரெலியாவில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவு
இன்று (22) பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் 3.5 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அண்மைக்காலத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏனைய சில பிரதேசங்களில் இன்று பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை விபரங்கள் வருமாறு:
- பண்டாரவளை – 11.5°C
- பதுளை – 15.1°C
- கட்டுகஸ்தோட்டை – 15.9°C
இதேவேளை, இன்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக முல்லைத்தீவில் 25.3°C பதிவாகியுள்ளது. மேலும், அம்பாந்தோட்டையில் 22°C ஆகவும், கொழும்பில் 22.1°C ஆகவும் வெப்பநிலை பதிவாகியிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

