போதைப்பொருளுடன் ஒருவர் கைது

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு – கிராண்ட்பாஸ், ஸ்டேஸ்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடமிருந்து 213 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )