
2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ; இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று அரங்கேறுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ் அல்லது ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
நியூசிலாந்து: டிவான் கான்வே, டிம் ராபின்சன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), கிறிஸ்டியன் கிளார்க், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

