
876 கிலோவுக்கும் அதிகமான சுறா மீன்களுடன் ஏழு பேர் கைது
நாட்டில் நீண்ட நாள் மீன்பிடி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 876 கிலோ 200 கிராம் சட்டவிரோதமாக பிடிபட்ட சுறாக்கள் (Alopias Vulpinus) உடன் ஏழு பேர் நேற்றைய தினம் (23) கைது செய்யப்பட்டனர்.
வென்னப்புவவில் உள்ள வெல்லமங்கரை மீன்பிடி துறைமுகத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடலோர காவல்படை துறையினர் குறித்த ஏழு பேரையும் கைது செய்துள்ளனர்.
அதன்படி, கைது செய்யப்பட்ட ஏழு கடற்றொழிலாளர்கள் சுறா மூட்டை மற்றும் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வென்னப்புவ மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

