விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்திய பரிசோதனைக்காக பலாங்கொட கஸ்ஸப தேரர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

சமீபத்தில் திருகோணமலை சம்புத்த ஜெயந்தி விஹாரையில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரர், நான்கு பிக்குகள் மற்றும் ஆறு சந்தேக நபர்களுடன் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பலாங்கொட கஸ்ஸப தேரர் நோய் நிலமையால் இரத்த பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )