
மே மாதம் 30 ஆம் திகதி நடைபெறும் 2026 அரச வெசாக் நிகழ்வு
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது .
இந்த நிகழ்வு தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளதாகஅரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையைக் கருத்திற்கொண்டு, போயா குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் ,ஜனாதிபதியின் ஆலோசனைப்படி போயா குழு கூடி, மே மாதம் 30 ஆம் திகதி அரச வெசாக் நிகழ்வை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பேராசிரியர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka

