UNP – SJB மற்றொரு வெற்றிகரமான சந்திப்புவெற்றிகரமான முடிவுக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை-எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

UNP – SJB மற்றொரு வெற்றிகரமான சந்திப்புவெற்றிகரமான முடிவுக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை-எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் மற்றொரு முக்கியசந்திப்பு இன்று (24) நடைபெற்றது.

இன்று காலை கொழும்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன, துணைத் தலைவர் நவீன் திசாநாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

​இரு கட்சிகளுக்கும் இனைந்து செயற்படுவது தொடர்பில் இந்தச் சந்திப்பின் போது விரிவாக விவாதிக்கப்பட்டன.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெற்ற மற்றொரு வெற்றிகரமான சந்திப்பு வெற்றிகரமான முடிவுக்கு வழிவகுக்கும் என்று தான் நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச X பதிவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )