
தெற்கு கடலில் போதை பொருளுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடி படகுகளுடன் 11 சந்தேகநபர்கள் கரைக்கு கொண்டு வரப்படவுள்ளனர்
தெற்கு கடலில் மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தெஹிபலே என்ற நபரால் நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
போலீசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய , கடற்படையினர் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 11 மீனவர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
இதன்போது சுமார் 200 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் ஒரு பல நாள் மீன்பிடி படகுடன் 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதே கடல் பகுதியில் மேலும் சோதனைகளை மேற்கொண்டபோது , போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு பல நாள் மீன்பிடிபி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
சுமார் 70 கிலோகிராம் போதைப்பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறப்படும் இந்த படகுடன் இரண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஆறு சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
அதன்படி, சந்தேக நபர்கள் கரைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

