
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் ; பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று (26) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் (X) சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள். இந்தியாவின் பெருமையும் மகிமையும் பிரதிபலிக்கும் இந்த தேசிய விழா, உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் அளிக்கட்டும். வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுப்பெறட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
CATEGORIES India

