பேலியகொடையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை

பேலியகொடையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை

பேலியகொடை தொரண சந்தி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மூன்று பெண்கள் பேலியகொடை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் குறித்த மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் வத்தளை, கஸ்எல்ல மற்றும் பொகவந்தலாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகவும், அவர்களின் வயது 21, 36 மற்றும் 47 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )