பதுளையில் பெண் கான்ஸ்டபிள் ஹெரோயினுடன் கைது

பதுளையில் பெண் கான்ஸ்டபிள் ஹெரோயினுடன் கைது

பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பகஸ்துவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அம்பகஸ்துவ பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அம்பகஸ்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )