உச்சத்தை தொட்ட தங்க விலை

உச்சத்தை தொட்ட தங்க விலை

இன்று தங்கத்தின் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய சந்தை நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 420,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, ஒரு பவுண் 22 கரட் தங்கம் 384,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 52,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,088 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தற்போதைய காலகட்டத்தில் தங்க விலை உயர்வை பதிவு செய்திருந்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம் இருப்பதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )