
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடுத்த விசாரணையை, வரும் ஜூலை 30ஆம் திகதி நடத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (29) கொழும்பு தலைமை நீதவான் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட மேலும் மூன்று சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
விசாரணையின் போது, வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனை இதுவரை பெறப்படவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணை ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அடுத்த விசாரணை நடைபெறும் தினத்திற்குள், சட்ட ஆலோசனை தொடர்பான நிலவரத்தை நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

