கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெராவை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01 ஆகிய தினங்களில் கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 31 (சனிக்கிழமை) மற்றும் பெப்ரவரி 01 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்களிலும் மாலை 6.30 மணி முதல் பெரஹெரா நிறைவடையும் வரை இந்தப் போக்குவரத்து ஒழுங்குகள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் போக்குவரத்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )