
ஆளுமைகளை கௌரவித்த IDM நேஷன்ஸ் கேம்பஸ் கல்வி நிறுவனம்
IDM நேஷன்ஸ் கேம்பஸ் கல்வி நிறுவனத்தின் ஊடக “ஆளுமைகளை கௌரவிக்கும் விழா 2026” கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோவின் நெறிப்படடுத்தலின் கீழ் கடந்த சனிக்கிழமை ( 24) மாலை கொழும்பு – 11 கடற்கரை வீதியில் அமைந்துள்ள புதிய கல்யாண் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் IDM நேஷன்ஸ் கேம்பஸ் கல்வி நிறுவனம் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக கொழும்பு போக்குவரத்துக்கு மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவின் உதவி காவல் பணிப்பாளர் KASW .குமாரஜீவவும் கலந்து கொண்டார்
குறித்த நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து கலந்துகொண்ட கலைஞர்கள், சமூக சேவகர்கள், ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















