வென்னப்புவ மீனவர்கள் மீது தாக்குதல் ; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

வென்னப்புவ மீனவர்கள் மீது தாக்குதல் ; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்கள் குழு ஒன்று, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் வந்த குழுவினர் அவர்களது படகை சோதனை செய்ததுடன், அங்கு இருந்த மீனவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பில் மீனவர்கள் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்ததை அடுத்து, இலங்கை கடற்படையினர் காயமடைந்த மீனவர்களை தெற்கு கடற்படை முகாமிற்கு கொண்டு வந்து, பின்னர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், துடுவாவ , மாரவில மேல மகாவெவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் நான்கு மீனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )