
புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் நுவரெலியா கிரகரி வாவிக் கரையோரத்தில் மீட்பு
புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் ,நுவரெலியா கிரகரி வாவிக் கரையோரத்தில் இன்று (01) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கிரகரி வாவியில் படகு சவாரி செய்யும் ஊழியர்கள் மற்றும் உயிர் காப்பு பொலிஸார் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொண்டனர் .
இதன்போது சடலம் புதிதாக பிறந்த சிசு ஒன்றினுடையது என்பதையும் தொப்புள் கொடியின் ஒரு பகுதி இன்னும் இருப்பதையும் பொலிஸார் கண்டறிந்தனர் .
இதனால், இந்தப் பிரசவம் வைத்தியசாலையில் நடைபெறவில்லை என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவை பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர் ,
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும்மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

