
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பயணித்த வேன் மோதியதில் இருவர் காயம் – சாரதி கைது
இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பயணித்த வேன் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இருவர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு சியாமளா சந்தி பகுதியில் நேற்று இந்த விபத்து ஏற்பட்டது .
நாடாளுமன்ற உறுப்பினரின் வேனின் ஓட்டுநர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

