அவுஸ்திரேலிய தின கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

அவுஸ்திரேலிய தின கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

அவுஸ்திரேலிய தினக் கொண்டாட நிகழ்வு நிமித்தம் ​​கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Matthew Duckworth மற்றும் அன்னாரின் பாரியார் Tanya Duckworth ஆகியோரின் கௌரவ அழைப்பை ஏற்றே அவர் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தரப்பினர் இங்கு கூடியிருந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )