இஸ்ரேலுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்துவோம் – ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்துவோம் – ஈரான் எச்சரிக்கை

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

சமீப களங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை மேலும் கடுமைப்படுத்தியுள்ளன.

ஈரான் முழுவதும் பரவலாக நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கிடையே இந்த பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த போராட்டங்களில் இஸ்ரேல் தலையீடு செய்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அதேவேளை, தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் இந்த பதற்றமான சூழ்நிலை, உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலவரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )