
கொழும்பு கங்காராம விகாரையில் புனித தெவ்னிமோரி புனிதத் தாதுக்கள் கண்காட்சியைத் திறந்து வைத்தமைக்காக ஜனாதிபதி அநுரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
கொழும்பு கங்காராம விகாரையில் புனித தெவ்னிமோரி (Devnimori) புனிதத் தாதுக்கள் கண்காட்சியைத் திறந்து வைத்தமைக்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“எனது 2025 ஏப்ரல் விஜயத்தின் போது, இந்தப் புனிதத் தாதுக்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, தற்போது மக்கள் இந்தத் தாதுக்களைத் தரிசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
எமது இரு நாடுகளும் ஆழமான நாகரிக மற்றும் ஆன்மீகத் தொடர்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. கருணை, அமைதி மற்றும் ஒற்றுமை குறித்த புத்த பெருமானின் காலத்தால் அழியாத செய்தி, மனித குலத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டட்டும்.”
என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

