
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இரண்டு ஆசிரியர்கள் உட்பட 37 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இரண்டு ஆசிரியர்கள் உட்பட 37 மாணவர்கள் இன்று (05) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை நேரத்தின் போது, கட்டடம் ஒன்றில் இருந்த குளவிக்கூடு கலைந்ததனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் எவருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலைமை இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்றவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
பாடசாலை வளாகத்தில் எஞ்சியுள்ள குளவிக்கூடுகளை அகற்றுவதற்கு கிளிநொச்சி அனர்த்த நிவாரண பிரிவு மற்றும் இராணுவம் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

