பஞ்சாப்பில் ஆம்ஆத்மி தலைவர் சுட்டுக்கொலை

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி தலைவர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர் லக்கி ஓபராய், இன்று மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை, ஜலந்தர் நகரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவிற்கு தனது ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், லக்கி ஓபராயை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த லக்கி ஓபராய், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் போலீசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )