க .பொ.த சாதாரண தரப் பரீட்சை : பெப்ரவரி 11 முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை!

க .பொ.த சாதாரண தரப் பரீட்சை : பெப்ரவரி 11 முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (2025) ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைகள் 2025 மார்ச் 17 ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமையப்பெற்றள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது.

பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் முதல் பரீட்சை முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல், பாடங்கள் தொடர்பான செயலமர்வுகள் மற்றும் வழிகாட்டல்களை நடத்துதல், பரீட்சை வினாத்தாள்களை ஒத்த மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், வினாக்கள் முன்கூட்டியே வழங்கப்படும் எனச் சுவரொட்டிகள், பதாகைகள் அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துதல் என்பனத் தடைசெய்யப்பட்டுள்ளன.

image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )