”உக்ரைன் – ரஷ்யா போருக்கு ஜூன் மாதத்திற்குள் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது”

”உக்ரைன் – ரஷ்யா போருக்கு ஜூன் மாதத்திற்குள் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது”

உக்ரேன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 4-ம் ஆண்டு நிறைவை நெருங்கியுள்ளது. இந்த மாதம் 24-ந்திகதியுடன், போரின் 4-ம் ஆண்டு முடிந்து, 5-ம் ஆண்டுக்கு நகரும்.

இந்த சூழலில், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நிருபர்களிடம் பேசியபோது, அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கான தெளிவான கால வரையறையை முன்மொழிந்துள்ளது.

அதன்படி, ஜூன் மாதத்திற்குள் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த காலக் கட்டத்தில் முடிவு ஏற்பட இரு தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய விடயங்களை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

குறிப்பாக, அந்த காலக்கெடுவுக்குள் முடிவு ஏற்படாவிட்டால், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இரு நாடுகளுக்கும் அழுத்தம் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன், அபுதாபியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கோடை கால தொடக்கத்திற்குள் தீர்வு ஏற்படுவது முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், எல்லை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான முக்கிய விவாதங்கள் முடிவாகாததால், அந்த முயற்சி தோல்வியடைந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )