
பாராக் ஒபாமா குறித்து வீடியோ ; நான் எந்த தவறும் செய்யவில்லை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சமூக வலைத்தள பக்கத்தில், முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஜனநாயக கட்சியினரின் தலைவருமான பாராக் ஒபாமாவை அவமதிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.
இந்த வீடியோவில் காட்டு விலங்குகளின் முகத்துக்குப் பதிலாக ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஓபாமாவின் முகங்கள் பொருத்தப்பட்டிருந்தது.
62 விநாடிகள் நீண்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரியதாக அமைந்தது.
ஒபாமா கருப்பினத்தை சேர்ந்தவர் என்பதால், சிலர் இதனை இனவெறியுடன் அவமதிப்பு என்று விமர்சித்தனர். ஜனநாயக கட்சியினரும், டிரம்பின் குடியரசு கட்சியின் மூத்த செனட் உறுப்பினர்களும் இதை கடுமையாக கண்டித்தனர்.
சர்ச்சைக்குப் பிறகு, சில மணி நேரத்திற்குள் அந்த வீடியோ நீக்கப்பட்டது.
வெள்ளை மாளிகை ஒரு ஊழியர் தவறுதலால் வீடியோவை வெளியிட்டுள்ளதாக விளக்கம் அளித்தது. ஆனால், டிரம்ப் “மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.

