
???? Breaking News : அமரகீர்த்தி கொலை வழக்கு ; 12 சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 12 சந்தேக நபர்களுக்கு கம்பஹா நிரந்தர மூவர் கொண்ட உயர் நீதிமன்றம் இன்று (11) மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி, நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்த சூழலில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
TAGS Sri lanka

