இதுதான் வெற்றியா அப்பா? ரஜினியிடம் கேட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்

இதுதான் வெற்றியா அப்பா? ரஜினியிடம் கேட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்

கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள படம் வித் லவ்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க, ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த் அறிமுகமாகியுள்ளார்

இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இன்று இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்துள்ளனர்.

இந் நிலையில், தனது படத்தின் வெற்றி குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் மிகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

இதில், “மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் உள்ளேன். படம் பார்த்து முடித்துவிட்டு வீட்டுக்கு போனேன். அம்மா, அப்பா இருவரும் என்னை கட்டிப்பிடித்து வாழ்த்தினார்கள். நான் அப்பாவிடம், இதுதான் வெற்றியா அப்பா என கேட்டேன். அது மறக்க முடியாத நிகழ்ச்சி. கடந்த 16 வருடங்களாக நான் வேலை செய்யவில்லை. இதுதான் என் முதல் வெற்றி. அந்த வெற்றியை வித் லவ் படம் கொடுத்துள்ளது” என சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )