கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்கு ; ஏப்ரல் 27க்கு விசாரணை நிர்ணயம்

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்கு ; ஏப்ரல் 27க்கு விசாரணை நிர்ணயம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டவிரோதமாக சொத்துக்கள் ஈட்டியதாக லஞ்ச ஒழிப்பு ஆணையம் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணையை கொழும்பு உயர் நீதிமன்றம் ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு நிர்ணயித்துள்ளது.

இவ்வழக்கு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் முன்னிலையில் இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, வழக்கை ஏப்ரல் 27 ஆம் திகதி விசாரிக்க தீர்மானித்தார்.

மேலும், அன்றைய தினம் சாட்சியாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

2020 ஆகஸ்ட் 13 முதல் 2024 ஜூன் 24 வரை ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டி லஞ்ச ஒழிப்பு ஆணையம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )