
சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
பல பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மழை நிலைமையைக் கருத்தில் கொண்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நுவரெலியா மாவட்ட மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குக் கட்டம் 2 (அபாய நிலை) கீழ் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு கட்டம் 1 (ஆரம்ப எச்சரிக்கை நிலை) கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (15) காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும் என NBRO தெரிவித்துள்ளது. மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருந்து, மண் சரிவு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

