
லுணுகலையில் புதையல் வேட்டை ; ஆறு பேர் கைது
லுணுகலை, புளுகொல்ல பகுதியில் புதையல் தேடும் நோக்கில் சட்டவிரோத அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புளுகொல்ல பகுதியில் உள்ள கும்பக்கன் ஓயாவை அண்மித்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 49 முதல் 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் லுணுகலை, எம்பிலிப்பிட்டி, பிலியந்தலை, தனமல்வில, மில்லபெத்த மற்றும் ஹொப்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக லுணுகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

