கொழும்பு – ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் மன்னார் முசலி வெள்ளிமலையை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்

கொழும்பு – ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் மன்னார் முசலி வெள்ளிமலையை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்

கொழும்பு, ஜிந்துபிட்டி சிகை அலங்கார நிலையத்தில் நேற்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவு பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வந்ததாகவும் ,நேற்றுஅங்கு முடி வெட்ட சென்ற நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் குறித்த சிகை அலங்கார நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )