
பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லாமி இலங்கைக்கு வருகை
டேவிட் லாம்மி இன்று (17) காலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.
இவ்விஜயத்தின் போது, அவர் அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியைச் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்திய ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கும் மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைக்கும் கூட்டாளர் அமைப்புகளுடனும் அவர் சந்திப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இவ்விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

