
யூடியூப் சேவை திடீர் முடக்கம் ; ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்பு
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் YouTube சேவை இன்று (18) திடீரென முடங்கியதால் பயனர்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டனர்.
Downdetector தளத்தின் தரவுகளின்படி, சுமார் 2.4 இலட்சம் பயனர்கள் யூடியூப் செயலியைப் பயன்படுத்துவதிலும், வீடியோக்களை பார்வையிடுவதிலும் தடைகளை சந்தித்ததாக முறைப்பாடு அளித்துள்ளனர்.
மேலும், WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட யூடியூப் வீடியோ இணைப்புகள் சரியாக செயல்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த திடீர் சேவை முடக்கத்தால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே, Google நிறுவனம் கோளாறை சரிசெய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

