நேபாளத்தில் பேருந்து விபத்து ; 17 பேர் பலி

நேபாளத்தில் பேருந்து விபத்து ; 17 பேர் பலி

நேபாளத்தில் பொக்ரா நகரிலிருந்து காத்மாண்டு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த 8 பெண்கள் உள்ளிட்ட 27 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஆற்றில் விழ காரணமான சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )