வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா பறங்கியாற்று பகுதியில் நேற்று (22) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில் பறங்கியாற்று பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தவர் அயலவர்களுடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட நிலையில் ஆற்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பறங்கியாற்று பகுதியை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த நபர் வனவிலங்குக்காக வைக்கப்பட்ட சட்டவிரோத மின் கம்பியில் சிக்குண்டு இறந்துள்ளாரா என்பதன் அடிப்படையிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )