
சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
ஆறு ஆண்டுகளாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வுகள், சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான மற்றும் நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், விருப்பமின்றிப் போயினும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஆறு ஆண்டுகளாக அநீதியான முறையில் மறுக்கப்பட்ட தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தேவையான அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயாராக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக தேசியப் பொருளாதாரம், வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு, தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிய அதிகாரிகளே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

