பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ; இருவர் வைத்தியசாலையில் அனுமதி

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ; இருவர் வைத்தியசாலையில் அனுமதி

வாத்துவ – மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இன்று இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்ப்பட்டுள்ளது .

விபத்து நேர்ந்த வேளையில் இரு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விபத்தில் காயமடைந்த இரு பேருந்து சாரதிகளும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )