
இந்த ஆண்டு இதுவரை 44 காட்டு யானைகள் உயிரிழப்பு
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 20 வரை 44 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது .
துப்பாக்கிச் சூடு, அனுமதியற்ற மின் கம்பிகள் பொருத்துதல், ரயில் விபத்துகள், விஷம் குடித்தல் மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் யானைகள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதே, காட்டுகளின் தாக்குதல்களால் 10 மனித உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாகவும் யானை வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மனிதர் – யானை மோதல்களை குறைக்கும் நோக்கில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறை மேலும் தெரிவித்துள்ளது.

