
காதலியை கரம்பிடித்தார் ராப் பாடகர் வேடன்
கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன், தனது நீண்ட நாள் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை கரம் பிடித்தார்.
செம்புக்காவு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து எளிமையான முறையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. இவரே பின்னணியில் வேடன் ஆனார்.
2020 கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ மூலம் கவனம் பெற்றார்.
CATEGORIES Cinema

