நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 958 பேர் கைது

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 958 பேர் கைது

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நோக்கில் செயல்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில் 958 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 07 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 968 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, 05 பேரை புணர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்படுகிறது.

சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்களிடமிருந்து பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

435 கிராம் ஹெரோயின்

874 கிராம் ஐஸ்

7 கிலோ 319 கிராம் கஞ்சா

89,747 கஞ்சா செடிகள்

4 கிராம் குஷ் வகை போதைப்பொருள்

43 கிராம் ஹஷீஷ்

1,740 போதை மாத்திரைகள்

337 கிராம் மதனமோதகம்

2 கிலோ 55 கிராம் மாவா

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )