ஜெர்மனியில் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவை தொழிற்சங்கங்களும் இரண்டு நாள் வேலைநிறுத்தம்

ஜெர்மனியில் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவை தொழிற்சங்கங்களும் இரண்டு நாள் வேலைநிறுத்தம்

அனைத்து பஸ் சேவைகள், டிராம்வண்டிகள் மற்றும் ரயில் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் இவ்வாறு இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வார இறுதிப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஊதியம் வழங்கப்படாமை உள்ளிட்ட சில சேவை நிபந்தனைகளை முன்னிறுத்தி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.

ஜெர்மனி முழுவதும் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக ஜெர்மனியின் முக்கிய நகரங்களில் பொதுப் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )