ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை – ட்ரம்ப்

ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை – ட்ரம்ப்

ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட்டு, புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் அந்த நாட்டின் அருகாமையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை எந்தத் தெளிவான உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலைமை தமக்கு திருப்திகரமாக இல்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“நாம் எதிர்பார்க்கும் விதமான உத்தரவாதங்களை அவர்கள் வழங்கத் தயாராக இல்லை. நிலைமையை கவனித்து வருகிறோம்,” என்றார்.

மேலும், மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் வெடிக்காத வகையில் ஈரானுக்கு ஒப்பந்தம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தேவையான சூழ்நிலை உருவானால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் பேச்சுவார்த்தைகளை நடத்தும் விதம் தொடர்பாக அமெரிக்கா முழுமையாக திருப்தியடையவில்லை எனவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )