
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்: 331 பேர் உயிரிழப்பு
ஆப்கான் தாலிபான் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கையில் மேலும் பல தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
இதுவரை 331 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் 104 தாலிபான் சோதனைச்சாவடிகளை அழித்ததுடன், 163 டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளதாகவும், கூடுதலாக 22 சோதனைச்சாவடிகளை கைப்பற்றியுள்ளதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

