
பொலிவியாவில் நாணயத்தாள்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து
பொலிவியாவில் நாணயத்தாள்களை ஏற்றிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான சரக்கு விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இதில் பயணித்தவர்களில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விமானம் சாண்டா குரூஸ் நகரிலிருந்து எல் ஆல்டோ (El Alto) விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்த போதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.
விமானத்தைத் தரையிறக்கும் போது, அது ஓடுதளத்திலிருந்து வழுக்கிச் சென்று அருகில் இருந்த வாகனங்களுடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானம் அந்நாட்டு மத்திய வங்கிக்குத் தேவையான பணத்தாள்களை ஏற்றிச் சென்றதாக பொலிவிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விபத்தின் போது சிதறிக்கிடந்த பணத்தாள்களைச் சேகரிப்பதற்காக மக்கள் அந்த இடத்தில் கூடியுள்ளனர்.
அவர்களைக் கலைப்பதற்காகப் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Type / to choose a block

