
மத்திய கிழக்கு மோதலால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பயணங்கள் தாமதம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானப் பயணங்களில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், விமானங்களின் பயணப் பாதைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலதிகமாகத் அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையை அடுத்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் தற்காலிகமாகத் தமது வான்பரப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

