
ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுக்கு (Masoud Pezeshkian) எவ்வித உயிர் ஆபத்துகள் இல்லை எனவும்
அவர் பாதுகாப்பாக உள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை ஆரம்பித்தன.
இந்த நிலையில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெஹ்ரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் அரசியல் மையங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சூழலிலேயே ஈரான் ஜனாதிபதி பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

