
சவூதி அரேபியாவிலும் பாரிய வெடிப்பு சத்தம் !
கத்தார் தலைநகர் டோஹாவிலும் (Doha),பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கத்தாரை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தமது வான் பாதுகாப்பு கட்டமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே வெடிச்சத்தங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதே வேளை குவைட்டிலும் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, சவூதி அரேபியாவின் ரியாத்திலும் வெடிச் சத்தங்கள் கேட்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

